Published on 20/09/2018 | Edited on 20/09/2018
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைத்தார்.
இதையடுத்து இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2011-ல் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று முதல் வழக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த வழக்கின் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.