Skip to main content

முகேஷ் அம்பானி இல்லத் திருமணம் - குடும்பத்துடன் மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த் 

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

நடிகர் ரஜினியின் பிறந்த நாள் ரசிகர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு செல்பி எடுத்துக்கொண்டனர்.


இதேபோல் பத்திரிகையாளர்களும் கூடியிருந்தனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்துவிட்டு, பின்னர் ஐந்து மாநில தேர்தல் குறித்து பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 

இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் காரில் விமான நிலையம் புறப்பட்டார். நாளை மும்பையில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்துடன் கலந்து கொள்ள இன்றே புறப்பட்டுச் சென்றார். காரில் புறப்படும்போது ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு சென்றார். 

 

 


 

சார்ந்த செய்திகள்