புதுச்சேரி அரசு சட்ட கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய கல்லூரி முதல்வருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![puducherry law college professors appointed chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/jQlZXQ_v5QGNB87Eh1a_c2I06KewXU2tpUKdHpeDqCQ/1578190571/sites/default/files/inline-images/Chennai_High_Court2222555_0.jpg)
புதுச்சேரி சட்ட கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக பாடங்கள் நடத்தப்படவில்லை என்பதால், வரும் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் பருவ தேர்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அக்கல்லூரி மாணவரின் தந்தையும், புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞருமான சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, சட்ட கல்லூரியில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, புதுச்சேரி அரசு சட்ட கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 8- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.