Published on 01/02/2022 | Edited on 01/02/2022

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை இரண்டு வாரங்களாக தமிழக அரசு விதித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழக முழுவதும் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளதால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுமக்கள் இன்று காலை முதல் கடற்கரை சென்று வருகிறார்கள்.