Skip to main content

பணம் வாங்கி கொண்டு ஜூனியர்களுக்கு பணியிட மாற்றம் - சர்ச்சையில் சிறைத்துறை 

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

 

சிறைத்துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பழி வாங்கும் நோக்கோடு, பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் அனுப்பியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

p

 

இது தொடர்பாக அனைத்து சிறைத் துறை துணைத் தலைவர்களுக்கு, கூடுதல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பணியிட மாற்றம் கோரி நேரடியாக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களில் போலியான விவரங்கள் இடம் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

 

மேலும், ஒரே நபர் பெயரில் வந்த பல விண்ணப்பங்களில், பணியிட மாறுதல் கோரும் இடம் வெவ்வேறாக இருப்பதால், பல குளறுபடிகள், கால விரையம் ஏற்படுதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த பணியாளர்களின் இத்தகைய செயல், பயிற்சி முடித்து பணியில் சேரும் இளம் பணியாளர்களுக்கு தவறான முன் மாதிரியாகிவிடும் என சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   இனிவரும் காலங்களில் சிறைத் துறை குறை தீர்க்கும் நாளில் நேரடியாக பெறப்படும் பணியிட மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனியர்களை விட்டு விட்டு பணம் வாங்கி கொண்டு ஜூனியர்களுக்கு பணிமாற்றம் செய்கிறார்கள் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது. 

 

புதுக்கோட்டை சிறையின் கீழ் மன்னார்குடி கிளை சிறை , பாபநாசம் கிளை சிறை ,  மயிலாடுதுறை கிளை சிறைகளில் தலா 1 வீதம் 3 முதல் நிலைகாவலர் பணி இடம் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு சீனியர்கள் பல காவலர்கள் பணி மாற்றம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். 

 

இந்த நிலையில் 2002,2005,2006,2008 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த முதல் நிலை காவலர்கள் சீனியர் இருக்கும் போது 2011பேட்ச் முதல்நிலை காவலர்களுக்கு பணியிட மாறுதல் ரகசியமாக போட்டு வைத்து இருக்கிறார்கள். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டசபை கூட்டம் முடிந்த உடன் பணியிட மாறுதல் ஆணை வர இருக்கிறது. தகுதியான காவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்காமல் பணத்தை வாங்கிட்டு இப்படி செய்கிறார்கள். 

 

ஏற்கனவே பணியிட மாறுதல் கேட்காத கிளைசிறைகளில் பணிபுரியும் முதல் நிலை காவலர்கள் பணியிட மாறுதல் கேட்ட மாதிரி தலைமை இடத்துக்கு அனுப்பி அவர்களை மாற்றிவிட்டு வேற ஒருத்தரை நியமிக்க நடந்த விஷயம் வெளியில் வந்து தற்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் இந்த பணி இடத்திற்கு 3 லட்சம் வரை பணம் வாங்கிகிட்டு பணியிட மாறுதல் போட்டு வைத்து உள்ளார்கள். இந்த கோப்பு தற்போது சிறைத்துறை தலைமை அலுவலக P.A பத்மாவதி கிட்ட இருக்கிறதாம். இப்படி சீனியர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜூனியர்களுக்கு பணியிட மாற்றம் அளித்தவர்களை உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா சிறைதுறை உயர் அதிகாரிகள் என்பது தற்போது சிறைக்காவலர்களின் கோரிக்கையாக உள்ளது. 


 


 

சார்ந்த செய்திகள்