Published on 01/05/2019 | Edited on 01/05/2019
வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஃபானி புயல் குறித்து பேசினார். அவர் கூறியது,
![fani](http://image.nakkheeran.in/cdn/farfuture/97cMe3mYeFOBXT3JxJjqkd_jg2UNCPtg1X2T9rceQ5Q/1556695164/sites/default/files/inline-images/fani_3.jpg)
ஃபானி புயல் தற்போது உச்ச உயர் தீவிர புயலாக, சென்னைக்கு வடகிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வரும் இரண்டு நாட்களில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, 3ம் தேதி ஒரிஷா மாநிலம் பூரி அருகே கரையைக்கடக்கும். இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கி.மீ. காற்று வீசக்கூடும். 3ம் தேதிவரை மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.