Skip to main content

அக்டோபர் 1 முதல் விவசாய நகை கடன் ரத்தா? -பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் உரிய அளவு பெய்துள்ளதால் சாகுபடி பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.

காவிரி டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நேரடி விதைப்பு மற்றும் நாற்று விடும் பணிகள் துவங்கியுள்ளது. விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

 PR Pandian condemned

 

கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் சாகுபடி பணிகளை துவங்குவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதால் இவ்வாண்டு கூட்டுறவு கடன் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக கடன் முழுவதும் தள்ளுபடி செய்து நிபந்தனையின்றி புதிய கடன் வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன்,

வரும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளில் வழங்கி வந்த 4% வட்டியிலான நகை கடன் வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படுவதையும் நிறுத்தப்பட உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து துரோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை உடனடியாக கைவிட வேண்டும். நிபந்தனையின்றி எப்பொழுதும் போல் நகைக்கடன் வழங்கிட வலியுறுத்துகிறேன் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்