Published on 16/01/2020 | Edited on 16/01/2020
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று 700 காளைகள் 730 மாடுபிடி வீரர்கள் என வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் பொங்கல் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, பாலமேடு ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதில் 700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய தாயாராகி வருகின்றன. இவற்றைக் காண வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.