பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வின் அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 'ரூபாய் 2.500, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர வேண்டும். ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது. பரிசுத்தொகை டோக்கனில் அ.தி.மு.க. தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது தவறானது. டோக்கன் மூலமாக, அ.தி.மு.க. கட்சியினர் சுயவிளம்பரம் தேடிக் கொள்வது, தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது’ எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.