Published on 12/06/2019 | Edited on 12/06/2019
சமூக வளைதளங்களான முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் வரும் தகவல்கள் உண்மையா, பொய்யா எனத்தெரியாமல் ஷேர் செய்யக்கூடாது, பார்வார்ட் செய்யக்கூடாது என வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
ஜாதி மத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வரும் எந்த ஒரு ஆடியோ, வீடியோ, செய்திகளை ஷேர் செய்யக்கூடாது. இதுப்போன்ற தகவல்கள் ஷேர் செய்து தனிநபர் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் தகவல் ஷேர் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.