Published on 11/03/2020 | Edited on 11/03/2020
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 20 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று மார்ச் 11 ந்தேதி அமைச்சர் ஆர் பி. உதயகுமார் அறிவித்தார். அதனை தொடர்ந்து அமைச்சரின் பேச்சை கண்டித்து வாணியம்பாடியில் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இல்லத்தையும் போராட்டக்குழுவினர் முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் வீட்டுக்கு, அவரது மகன் நடத்தி வரும் மருத்துவமனைக்கு என இரண்டு இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.