Published on 31/10/2022 | Edited on 31/10/2022

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று சூரசம்ஹார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மூன்று முறை அம்புகளால் சூரனை வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, என பக்தி பரவசத்தில் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் ஆசுவாசம் அடைந்து பின்னர் கோவிலில் சென்று அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார திருவிழாவையொட்டி சிக்கல் கோவிலில் வண்ணமயமான வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.