Skip to main content

மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் மாற்று கருத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்கா...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் மாற்று கருத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்காவினை செயல்படுத்த கோரி,  இன்று ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அனுகு சாலையில் வைத்து  உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
 

perambalur issue


கடந்த 2013 ஆம் ஆண்டில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில்  வைத்து,  பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக ஜவுளி பூங்கா செயல்படுத்தபடும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். 

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் & இரூர் ஊராட்சியில் உள்ள 40.7 ஹெக்டேர்(100 ஏக்கர்) நிலம் தேர்வு செய்யபட்டு கிராம சபை தீர்மானம் செய்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் வசம் நிலம் ஒப்படைக்கபட்டது. 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்,  சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், ஆலத்தூர் வட்டார வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், புது வாழ்வு திட்ட இயக்குநர், பாடாலூர் & இரூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தபட்டது. இதில் ஜவுளி பூங்கா திட்டம் செயல்பட ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பரிமாறபட்டது. இந்த ஜவுளி பூங்காவில் ஜவுளி தொழில் செய்யதிட 20 நபர்கள் வரை விருப்ப மனு கொடுத்தனர். தொடந்து அந்த தொழில் முனைவோர்கள் ஜவுளி பூங்கா இடத்தை சமன் செய்து, அனுகு சாலையை தார்சாலையாக மேம்பாடு செய்து தருமாறு கேட்டு கொண்டனர். 

தொடர்ந்து இடத்தை சமன் செய்வதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யபட்டது. ஜவுளி பூங்கா சாலையை தார் சாலையாக மேம்பாடு செய்திட மதிப்பீடு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதி பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் வசம் கொடுக்கபட்டது. இந்த பணி தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகள் கலையபட்டு வேலை ஆரம்பிக்கபட்டது. இந்நிலையில் அப்போது இருந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னர் புதியதாக வந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாலை வேலையை நிறுத்தி வைத்தார். 

மேலும் ஜவுளி பூங்கா அமைக்க இந்த இடம் ஏற்றதக்கது அல்ல, வேறு இடத்தில் அமைக்கலாம் என தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு கடிதம் வைத்து உள்ளார். மேலும் தொழிற் முனைவோர்கள் யாரும் முன் வரவில்லை என தகவல் சொல்லி உள்ளார். 

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட செயலாரும், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் அவர்களும், பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன் அவர்களும் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் அவர்களிடம் ஜவுளி பூங்காவை செயல்படுத்த கோரிக்கை வைத்தனர். 

இதன் பேரில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்களை அழைபேசியில் தொடர்பு கொண்டு பெரம்பலூர் மாவட்ட ஜவுளிபூங்காவை செயல்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளை முடுக்கி விடுமாறு அறிவுறுத்தினார்.
 

perambalur issue


இது நடந்து ஒரு வருடமாகியும் மாவட்ட நிர்வாகம் ஜவுளி பூங்காவை செயல்படுத்த  எந்தவித ஆயத்த வேலைகளை மேற்கொண்டதாக தெரிய்வில்லை. பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு  எம்.எல்.ஏக்கள் வாயிலாக அமைச்சர் வரை கொண்டு சென்றும் ஜவுளி பூங்கா செயல்பட ஆயத்த பணி மேற்கொள்ளாமல் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 

மத்திய அரசு அல்லாமல் மாநில அரசால் முதன்முதலாக அறிவிக்கபட்ட இந்த ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.