Published on 26/02/2023 | Edited on 26/02/2023
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் உள்ள மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என கிராம மக்கள் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் அரும்பருதி பாலாற்று குவாரியில் அரசு விதித்த அளவை தாண்டி அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் மக்கள் ஈடுபட்டனர். குறிப்பாக 'நீர்வளத்துறை அமைச்சர் மண்ணிலேயே எல்லா மணலும் வண்டியிலே' என்ற பதாகைகளுடன் பொதுமக்கள் அடையாளம் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.