Published on 21/12/2020 | Edited on 21/12/2020

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து இருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் இரண்டாவது கட்டத் தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கினார்.
நான்கு நாட்களில் 6 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் 'மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசின் கடமை. அரசுக்கு சரியான புரிதல் இல்லை. எந்தநிலை தொடர்ந்தாலும் கண்ணியம் தவறமாட்டோம். போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் எனக்கூறுவது புரிதல் இல்லாததையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண் சட்டங்களால் பாதிப்பு இல்லை என முதல்வர் கூறியது பற்றி விவசாயிகள்தான் சொல்லவேண்டும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.