Skip to main content

நெல்லை டவுன் மார்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் பகுதியில் அமைந்திருக்கும் நேதாஜி போஸ் மார்க்கெட்டில் சுமார் 350 கடைகள் உள்ளன. இந்த கடைகளை காலி செய்ய வேண்டுமென்று மாநகராட்சி நிர்வாகம், ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்திருந்தது. அந்த நோட்டீஸில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 10.67 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட வேண்டியதே நோக்கம் என்றும், 15.09.2019 க்குள் கடைகள் காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கால அவகாசமின்றி திடீர் நிபந்தனையால் பதறிப்போன மார்க்கெட் கடை வியாபாரிகள், அதன் தலைவரும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மாலைராஜா தலைமையில் இன்று மார்க்கெட் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வர்த்தகப் பொருளாளர் எம்.ஆர்.எஸ் உள்பட 300- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

nellai town market  shop owners and merchants  fasting strike


மாநகராட்சி எங்களுக்கு கடைகளை காலி செய்ய கால அவகாசமும் தரப்படவில்லை. மேலும் எங்களுக்கு மாற்று இடம் வழங்க மாநகராட்சி முன் வரவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்கிறார்கள் பாதிப்பிற்குள்ளான சந்தை வியாபாரிகள்.
 

சார்ந்த செய்திகள்