நெல்லை மாநகர காவல்துறையில் துணை ஆணையராக பணியாற்றும் சரவணன். ஏற்கனவே தனது பணி மற்றும் சமூக சேவை மூலம் மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளார். பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதேபோல், சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நிவேதன் என்பவர், தான் தாம்பரம் தாசில்தார்; 2019-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவன், 2018-ல் நடந்த குரூப்-1 தேர்வில் மாவட்ட அளவில் 4-வது ரேங்க் எடுத்தவன் என தனது ட்விட்டர் பக்கத்தின் நிலைத் தகவலில் குறிப்பிட்டிருக்கிறார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்த துணை ஆணையர் சரவணன், "தம்பி நீங்க தாசில்தார் இல்லையாமே.. அதே மாதிரி டி.என்.பி.எஸ்.சி.யிலும் மாவட்ட வாரியாக ரேங்க் கிடையாதாமே, உங்களை பரங்கிமலை போலீஸ் தேடுறாங்களாம் கொஞ்சம் என்னான்னு கேளுங்க.." என அவர் போலியான நபர் என்பதை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.
உடனே பதிலுக்கு "ஏன் சார்.? உங்களுக்கு காவல்துறையில் வேற வேலையே இல்லையா? எப்ப பார்த்தாலும் சமூக வலைதளத்தில் இருங்கீங்க. உங்கள் துறை சார்ந்த வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தவும். மத்த மாவட்ட காவல் துறையினர் யாரும் சமுகவலைதளத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை" என கூறிவிட்டு, உடனே தனது ட்விட்டர் அக்கவுண்டை க்ளோஸ் பண்ணிட்டு ஓடிட்டார் அந்த டூபாக்கூர்.!
பல்லாவரத்தில் வசிக்கும் இந்த டுபாக்கூர் பார்ட்டி, தனது முகநூல் பக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி.க்கு படிச்சிட்டு வருவதாக நிலைத்தகவலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆக பேஸ்புக்ல தேர்வர், ட்விட்டரில் ஆபிஸர்.!