அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் மாணவி அனிதாவின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, அனிதா நினைவு நூலகம், அனிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் அவரது சொந்த ஊரான குழுமூரில் இன்று மாலை மூன்று மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
வரவேற்புரை: செந்துறை இராசேந்திரன்
தலைமை: ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம் )
முன்னிலை: ஆ.இராசா (கொள்கை பரப்புச் செயலாளர் திமுக)
நூலக திறப்பாளர்: தொல்.திருமாவளவன் (தலைவர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
கருத்துரை:
திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
இரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி)
கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், மார்க்சிய கம்யூ. கட்சி)
வாழ்த்துரை:
எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்டச் செயலாளர், திமுக)
ஆர்.டி.இராமச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர்கழகம்)
நன்றியுரை: த.சண்முகம் (அனிதா நினைவு அறக்கட்டளை)