
தேசிய அளவில் தூய்மை விருது அறிவிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கநிதி- நாராயணசாமி வழங்கினார்.
புதுச்சேரி கூனிச்சமப்பட்டு கிராமத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி தேசிய அளவில் தூய்மைக்கான பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஸ்வச் வித்யாலாயா விருது பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த பள்ளிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கல்வித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவித்தார். அப்பள்ளியின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கநிதிக்கான காசோலையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,
"புதுச்சேரியில் உள்ள மற்ற பள்ளிகளும் இதேபோல் தூய்மையை கடைபிடித்தால் அதற்குரிய கவுரவம் அளிக்கப்படும்" என்றார்.