Published on 14/12/2020 | Edited on 14/12/2020

மக்கள் நீதி மலரும் போது குறைந்தது, 20 பெண்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் எனத் திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில், ஒரு மாவட்டச் செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது, குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து, இதை நான் சொல்லவில்லை எனக் கூறியுள்ளார்.