Skip to main content

தவறு செய்த அதிகாரிகளை தான் விமர்சித்தேன்: அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கருணாஸ்

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
Karunas


முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார். அதில், காவல்துறை டி.சி. அரவிந்தனை நோக்கி சவால்விட்டப்படி பேசியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 

இதனை அடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 
 

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,
 

முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
 

நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்?
 

கூவத்தூர் சம்வபம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா?, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன் என்றார். 


 

சார்ந்த செய்திகள்