Skip to main content

நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ; இளைஞர் அதிரடியாக கைது

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
Cut the tongue in two and tattoo;  The youth was arrested in action

திருச்சியில் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதன முறையில் ஆபரேஷன்களை செய்து வந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டை தாமாக முன்வந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டாட்டூ சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதனமான முறையில் நாக்கை இரண்டாக கிழித்து நாக்கிற்கு வண்ணம் திட்டுவது, கண்களுக்குள் வண்ணம் தீட்டுவது போன்ற ஆபரேஷன்களை செய்து சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

முன்னதாக தன்னை இதுபோன்ற மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் தன்னுடைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, நீங்களும் இதுபோல செய்து கொள்ள வேண்டும் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனைத்  தொடர்ந்து பலரும் அவரிடம் நாக்கை இரண்டாக கிழித்து வண்ணம் திட்டிக் கொள்ளும் ஆபரேஷன் செய்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தது. மருத்துவக் கட்டுப்பாடுகளை மீறி இதுபோன்ற நூதனமான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இது இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி காட்டுகிறது என்ற புகார் அடிப்படையில் ஹரிஹரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்