சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட சின்ன செட்டி தெருவில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக நகர்மன்ற தலைவர் கே. செந்தில்குமார் கலந்துகொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு நீட் விலக்கு நம் இலக்கு என வாசகம் அடங்கிய பெட்டியில் நாட்டின் ஜானதிபதிக்கு அனுப்புவதற்கு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அதேபோல் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து நீட் விலக்கு குறித்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கல்பனா சண்முகசுந்தரம், தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் நகராட்சி அலுவலகம் அருகே நகர் மன்ற உறுப்பினர் சி.கே ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்விலக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நீட்விலக்கு நம் இலக்கு என கோசங்களை முழங்கினார்கள். இதேபோல் நகரின் அனைத்து வார்டுகளிலும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதேபோல் குமராட்சி கிழக்கு ஒன்றியம் சக்தி நகரில் குமராட்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் நீட் விலக்கு நம் இலக்கு என எழுதி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் பரந்தாமன், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணசாமி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் ஒன்றிய அமைப்பாளர் ரவிக்குமார்,, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பேருந்துகளில் வந்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
அண்ணாமலைநகரில் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமையில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை எளியோர்களின் எழுச்சி நாளாக கொண்டாடினார்கள். இதேபோல் காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.