திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைபட்டியைச் சேர்ந்த ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவர் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளிடம் வாழ்த்து பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் மருதராஜீம், மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் கண்னன் உட்பட பொறுப்பாளர்கள் பலரும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், புரட்சித்தலைவர் அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் திண்டுக்கல் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. புரட்சித் தலைவி அம்மா பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது, கடந்த முறை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்து 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது வெற்றிக்கூட்டணி அமைத்திருக்கும் அதிமுகவுடன் தோழமை கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.க., உட்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளின் ஓட்டுக்களையும் சேர்த்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து மூன்று லட்சம் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.
இதில் மாவட்ட பொருளாளரும், சிட்டிங் எம்பியுமான உதயகுமார், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் பாரதிமுருகன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளான தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் பாலசுப்ரமணி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நல்லாம்பட்டி பரசுராமன், திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெ.எம்.எஸ்.இக்பால், சி.எஸ்.வெங்கடேசன், இராஜசேகரன், லெனின் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்!