அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (05/11/2024) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் போட்டியில் உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 10 மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எட்டு மாகாணங்களில் முன்னிலை வகித்து வருகிறார். கென்டகி, இண்டியானா, மேற்கு வெர்ஜீனியா, அர்கன்சஸ், ப்ளோரிடா உள்ள பத்து மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல டென்னசி, மிஸிசிப்பி, அலபாமா, தெற்கு கரோலினா, ஒக்லஹாமா மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் 8 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூ ஜெர்சி, டெல்வார், மேரி லேண்ட், இலியான்ஸ் உள்ளிட்ட எட்டு மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமாக முன்னிலை நிலவரப்படி டிரம்ப் 101 இடங்களிலும், கமலா ஹாரிஸ் 71 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பிரதிநிதிகள் ஆதரவு இருந்ததால் டிரம்ப் வெற்றிமுகம் கண்டுவருகிறார்.