Published on 21/11/2020 | Edited on 21/11/2020
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "கரோனா காலத்தில் சுமார் ரூபாய் 100 கோடி அளவில் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து, நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. ஏழு பேர் விடுதலை, நீட் தேர்வு ரத்து ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அரசு சார்பில் பேசுவார்கள்.
உதயநிதி நடத்திய ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி உள்ளிட்டவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. உதயநிதி போன்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் கரோனா இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.