தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளர்களான முள்ளிப்பாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் முருகன், பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மேகலா ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
அவர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காப்பிளியபட்டி, கோடாங்கிபட்டி, குளிப்பட்டி, கருதனம்பட்டி, குழந்தைபட்டி, ம. மூ. கோவிலூர் பிரிவு, பாறையூர், முள்ளிப்பாடி, ஆத்துமரத்துப்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு திரட்டனார். அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது,
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் ஆனால், எதிர்க் கட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த விருப்பம் இல்லை. அதனால் வழக்கு மேல் வழக்கு போட்டதால் தேர்தல் நின்று போனது. அதனால் முதல்வரும், துணை முதல்வரும் உச்சநீதிமன்றம் சென்றதால் தற்போது தேர்தல் நடத்த முடிகிறது.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தமிழகத்தில் நல்லாட்சியை புரிந்து வருகின்றனர். கழக ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லை, ஜாதி பிரச்சனை இல்லை அதுனால் நடக்க கூடிய உள்ளாட்சி தேர்தலில் அமோகமாக வெற்றி பெறுவோம் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சட்டம்-ஒழுங்கு சீராக தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூறினார்.