Published on 20/11/2021 | Edited on 20/11/2021
![Trichy Central Jail DGP Change!](http://image.nakkheeran.in/cdn/farfuture/LfSA5rqW8q5h194-f87iWf8pcSFQwXJdtggrK_domzs/1637389664/sites/default/files/inline-images/th-1_2255.jpg)
தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, கோவை, மதுரை உள்பட 9 மாவட்டங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இதில், திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. கனகராஜ், சென்னை மண்டலத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிவந்த ஜெயபாரதி, திருச்சி மத்திய சிறை டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திருச்சி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருச்சி மத்திய சிறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று (19.11.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஏற்கனவே திருச்சி மகளிர் சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.