Skip to main content

பிரியாணி வாங்கிக் கொடுத்து 17 வயது சிறுமி வன்கொடுமை..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

manachanallur manikandan arrested by pocso act

 

திருச்சி, மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றும் மணிகண்டன் (27) என்ற வாலிபர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வழக்கு சம்பந்தமாக மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்தச் சிறுமியின் குடும்பத்தில் வரிவசூல் செய்ய அடிக்கடி வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், அப்போது அந்தச் சிறுமியின் குடும்பத்தின் எளிமையைக் கருதி அடிக்கடி பிரியாணி கொடுத்து பழக்கி வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை அவரை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சமீபத்தில் அவரை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய உறவினர்களோடு சென்று புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்