Published on 07/01/2020 | Edited on 07/01/2020
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களும் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரி மாணவர்களும் ஜே.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவைகளை மத்திய அரசு திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசை வலியுறுத்தினர்.