Published on 01/12/2018 | Edited on 01/12/2018
படிப்பறிவு இல்லாத தன்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திவிட்டதாக மகன் மீது தந்தை புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் கேசவன். 83 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகன். இரண்டாவது மகன் ராஜேந்திரன். கேசவன் தனது மனைவி மற்றும் இரண்டாவது மகனோடு மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தனக்கு படிப்பறிவு இல்லாததை வைத்து தனக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 செண்ட் நிலத்தை மூத்த மகன் மோகன் எழுதி வாங்கிக்கொண்டார். பிள்ளைகள் படிப்புக்காக வங்கிக் கடன் வாங்குவதாக கூறி படிப்பறிவு இல்லாத தன்னை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக்கொண்டார். இதுபற்றி கேட்டபோது தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டதாக என்று புகாரில் கூறியுள்ளார்.