Published on 22/12/2023 | Edited on 22/12/2023

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர், மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (52). இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். மீனாட்சி சுந்தரத்தின் தங்கை கணவர் தங்கவேல், ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பேரோடு பகுதியில் தறிப்பட்டறை நடத்தி வருகிறார். மீனாட்சி சுந்தரம், அங்கு தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன் தினம், இரவு தறிப்பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மீனாட்சி சுந்தரம் உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.