Skip to main content

உங்களுக்காக உழைத்தவர்களை பொதுமக்கள் மறந்துவிடாதீர்கள்; கலைஞர் புகழஞ்சலி கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேச்சு

Published on 26/08/2018 | Edited on 27/08/2018

 

ratharavi

 

 

 

''மறக்க முடியுமா கலைஞரை'' என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  அந்த விழாவிற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர் ஆற்றிய தொண்டுகள் அவருடைய ஆளுமைகள் குறித்து நினைவுகூறப்பட்டன.

 

அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசுகையில், 28-ஆம் தேதி இந்த இயக்கத்திற்கு தலைவராக போகவுள்ள, முதல்வராக போகவுள்ள ஸ்டாலினுக்கு வணக்கம். சாதாரணமான மக்களின் நிலையை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து தவம் இருந்து பெற்ற தலைவர் ஸ்டாலினை செயல்தலைவராக அடையாளம் காட்டினார் கலைஞர். அவர் அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டும். உங்களுக்காக உழைத்தவர்களை,உழைப்பவர்களை பொதுமக்கள் மறந்து விடாதீர்கள். இந்த அமைப்பு பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்வது நல்லது என கூறினார்.

சார்ந்த செய்திகள்