Skip to main content

கள்ள சந்தையில் மது விற்பனை அமோகம் – கல்லாக்கட்டும் அதிகாரிகள்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
Liquor sales on the counterfeit market

 

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்ததால் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 8 மணி முதல் 12 மணிவரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதி அளித்தது. அதேபோல் அரசு மதுபான கடைகளும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

 

ஆனால் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்காமல் தொடர்ந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியதால் தமிழக அரசு ஊரடங்கை மேலும் வலுப்படுத்தியது. இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறக்கப்படும் என்றும், அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்படும் என்றும் உத்தரவிட்டது.

 

அதன்படி இன்று முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்பட்டதால், மதுகுடிப்பவர்கள் நிலை தற்போது கேள்விகுறியாகி உள்ளது. இதனால் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மதுபான பாட்டில்களை வீடுகளிலும், சிறிய அளவிலான ஓட்டல்களிலும், வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனா்.

 

அதிலும் ஒரு குவாட்டர் விலை 125க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெளியே கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு குவாட்டர் விலை நகர பகுதியில் 350 ரூபாய் வரை விற்கபடுகிறது. அதிலும் நகர பகுதியில் ராமகிருஷ்ணா பாலம், கரூர் பைபாஸ் பாலம், உறையூா், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

 

அதேபோல் புறநகா் பகுதியில் சமயபுரம், மேலவாளாடி, மண்ணச்சநல்லூர், பஞ்சப்பூர், உள்ளிட்ட புறநகா் பகுதிகளில் ஒரு குவாட்டர் விலை 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்பவர்களும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரை சரி கட்டிவிட்டு, கல்லாக்கட்ட ஆரம்பித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.