Skip to main content

கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் - திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

இந்தியாவில் தேசப்பற்று என்ற தலைப்பில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஹெர்போ கேர் டிரஸ்ட் சார்பில் ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் நவீன் பாலாஜி இந்த நிகழ்ச்சியை நடத்தினார். முன்னதாக ஹெர்போ கேர் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
 

தேசப்பற்று பாடல்களுடன் பரதநாட்டியத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹெண்டே, நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் சுல்தான், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத், திருவள்ளூர் மாவட்ட திமுக துணை செயலாளர் கதிரவன், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ முருகன், செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முகமது ஹிதயதுல்லா, காங்கிரஸ் துணைத் தலைவர் அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் முகமது முனீர் மற்றும் ராமசுப்புரமணியம், ஷாஹ்னாவாஸ் கான், ஜான் சத்தியகுமார், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற, விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத்சிங் குடும்பத்தினருக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மருத்துவர் நவீன் பாலாஜியை கேட்டுக்கொண்டனர். வரும் காலங்களில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் அளிப்பதை லட்சியமாக கொண்டிருக்கும் மருத்துவர் நவீன் பாலாஜியை மனதார பாராட்டுவதாகவும், அவரது சேவைகள் தமிழக மக்களுக்கு தொடர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். 
 

இந்த நிகழ்ச்சியில் மாணவி சுபானு என்பவர் யோகாசனம் செய்தார். இதனை இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன், திருச்சி வேலுசாமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைவரும் வியந்து பார்த்தனர். மாணவி சுபானுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 
 

மாணவி சுபானு யோகாவிற்காக ஐ.நா. சபை மற்றும் உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தனக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அதற்காக மருத்துவர் நவீன் பாலாஜியிடம் சிகிச்சை பெற்று பலன் அடைந்ததாகவும், தற்போது எளிமையாக யோகா செய்து வருவதாகவும் தெரிவித்தார் சுபானு. 



 

சார்ந்த செய்திகள்