சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கட்சி வேட்பாளரை ஆதரித்து சோமனூர் சுற்றுவட்டார முழுக்க இரவு வரை தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் அப்போது அவர் மக்களிடம் பேசும்போது, இந்த சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுங்கள் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை உட்பட ஏராளமான பிரச்சனைகளை ஆளும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை இவர்களை மாற்ற வேண்டும். அதேபோல் மாற்று என்று சொல்லி இப்பொழுது வாக்கு கேட்டு வரும் மற்ற கட்சியினர் பற்றியும் உங்களுக்கு தெரியும் அவர்களும் மாற்று கிடையாது.

மாற்று என்பது மக்கள் நீதி மய்யம்தான் இந்த பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் விவசாயிகள் என தங்கள் வாழ்க்கையை உழைப்பால் கொண்டு செல்லும் மக்கள் நிரம்பிய பகுதி ஆனால் இன்று விசைத்தறிகள் ஓடவில்லை விசைத்தறிகள் பழைய இரும்பு கடைகளுக்கு விற்கப்படும் கொடூரம் நடக்கிறது. இது எதனால் "வரியைப் போட்டு தறியை முடக்கிய மத்திய அரசால்" அந்த மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் இந்த எடப்பாடி அரசால். ஆகவே மக்கள் இதை உணர்ந்து இந்தக் கூட்டம் கூடாது என்று முடிவு செய்து மாற்றாக உள்ள மக்கள் நீதி மய்யதிற்கு வாய்ப்பைக் கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.