Skip to main content

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது!  -கமல்ஹாசன் பகீர்!!!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
kamalhaasan



திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கஜா  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஆறுதல் கூறி  நிவாரண பொருட்கள் வழங்கினார். அதன்பின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு  வந்த அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது...


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும் மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன. நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை.  இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் இரண்டாவது மாநிலமாக உள்ளது.  ஆகையால் மத்திய அரசு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம். டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம் என  கூறினார். பேட்டியின் போது மாவட்ட, நகர, மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்