தமிழக முதல்வராக 5 முறையிருந்த திமுக தலைவர் கலைஞர் மறைவு கட்சி கடந்து பொதுமக்களை வெகுவாக பாதித்துவிட்டது. பெரும்பாலான இடங்களில் திமுகவினர் சாலைகளில் வைத்திருந்த கலைஞர் புகைப்படத்துக்கு கட்சியை கடந்து வந்து பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சியில் மறைந்த கலைஞருக்காக அஞ்சலி பேனர் வைத்து, அதன் கீழே சாமினா பந்தல் போட்டு கலைஞரின் புகைப்படத்தை வைத்திருந்தனர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் மற்றும் திமுகவினர்.
கலைஞருக்காக மவுன அஞ்சலியும், ஊர்வலம் நடத்திவிட்டு கலைஞரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்னை சென்றுள்ளனர் அப்பகுதி திமுகவினர். மாலை அப்பகுதி திமுகவினர் சிலர் அஞ்சலி செலுத்த வந்தபோது பேனர் கிழிக்கப்பட்டும், புகைப்படம் உடைக்கப்பட்டும் இருந்ததை கண்டு கொதித்துப்போய்வுள்ளனர்.
இதனை எகத்தாளமாக பார்த்து சிரித்துள்ளனர், அவர்களிடம் சென்று கேட்ட திமுகவினரிடம், கலைஞரை கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர். தலைவர் பிறந்த நாளில் சண்டை எதுவும் போடக்கூடாதுயென அடிமட்ட தொண்டர்கள் திரும்பிவந்துள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 9-ந்தேதி வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில், திமுகவை சேர்ந்த தண்டபாணி தலைமையில் திமுகவினர் சென்று, அதிமுக ஊராட்சி செயலாளர் ராஜா, கி.செ பழனி, முனுசாமி, மோகன் என 8 பேர் மீது கலைஞரின் படத்தை சேதப்படுத்தியது, பேனர்களை கழித்தது என புகார் அளித்துள்ளனர். புகாரை வாங்கிய போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பேனரை கிழித்ததாக கூறப்படும் அதிமுகவினர் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபிலின் தீவிர ஆதரவாளர்கள் எனக்கூறப்படுகிறது.