Skip to main content

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "BHEL" நிறுவனத்தில் வேலை!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் "பெல் நிறுவனம்" (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்) ஆகும். ஹைத்ராபாத்தில் உள்ள இந்நிறுவனத்தில் (Civil Engineer ,Electrical Engineer , Supervisor) உள்ளிட்ட 27 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை BHEL - "BHARAT HEAVY ELECTRICALS LIMITED" நிறுவனம் வெளியிட்டது . இதற்கான விண்ணப்பத்தை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என BHEL நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி : https://web.bhelhyd.co.in/FTES/artisan_app_form.jsp ஆகும். 
 

bhel



 

bhel



இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 24/04/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 14/05/2019. இந்த பணியிடங்கள் விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி : ( B.E-Civil , Electrical) . அதே போல் விண்ணப்பக் கட்டணமாக (General / OBC) - ரூபாய் . 200 யை இணைய வழியில் (Debit card , Credit card , Net Banking) செலுத்தலாம். மேலும் (SC/ST) , முன்னால் ராணுவ வீரர்களின் விண்ணப்பதாரர்கள் , மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விண்ணப்பிப்பது தொடர்பான முழு விவரங்களுக்கு : https://web.bhelhyd.co.in/FTES/main_advt.jsp#imp என்ற இணையதளத்தை அணுகவும். இந்த பணியிடங்களுக்கு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ்,சேலம். 
 

சார்ந்த செய்திகள்