Skip to main content

8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா? அமைச்சர் ஜெயக்குமார்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 


 வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.   அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்மகம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.   

 

j

 

இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அத் அதற்கு அவர்,   வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாக பழம் பாலில் விழும்.   வேலூர் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பணத்தை நம்பி வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. பெற்றது மோசமான, மோசடியான வெற்றி. 

 

கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் வாங்கினார்கள்.   அப்பாவி மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை பெற்றனர். ஆனால் இந்த முறை ஏமாற்ற முடியவில்லை. கிளுகிளுப்பு காட்டி மக்களை ஏமாற்றும் செயல் எடுபடவில்லை.

 

இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேறாது என்ற நிலைதான் உள்ளது. 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா?. மக்கள் மனதில் அ.தி.மு.க. முழுமையாக வெற்றி பெற்று உள்ளோம்’’என்று கூறினார்.  

 

சார்ந்த செய்திகள்