Published on 31/01/2020 | Edited on 31/01/2020

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு சீல் வைத்தது போலீஸ்.
கரூர் டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார் இன்று கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு, சென்னையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2011-15ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், அம்பத்தூர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையை அடுத்து செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு சீல் வைத்தனர் போலீசார்.