Published on 02/02/2019 | Edited on 02/02/2019
விருதுநகரில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“மத்திய அரசு நேற்று அறிவித்த பட்ஜெட், விதிமுறைகளை மீறி வீடு வீட்டுக்கு பணம் கொடுத்து ஒட்டு கேட்பதற்கு நிகரான மோசடியானது. விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் மூலம் எந்த பயனும் இல்லை. மாதம் 500 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்குவது அவர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்திய அரசை கார்ப்பரேட் ஏஜண்டாகப் பார்க்கிறார்கள் . விவசாயிகள் மத்திய அரசை விரோதியாகப் பார்க்கிறார்கள். மாநில கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். வரும் பாரளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 130 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறும். தமிழகத்தில் பிஜேபி மற்றும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.” என்றார்.