வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டு சாலைகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தடுப்பு கோபுரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஒரே சாலையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் (apprentice) மூன்று ஐடிஐ மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இறைவன் காடு பகுதியைச் சேர்ந்த ஜீவா பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் இருவரும் பின்னே வந்த லாரியின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். சூர்யா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.