திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, ஆம்பூர் அடுத்த சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில், தரணி ராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழி பண்ணை அமைத்து கோழி வளர்ப்பு பண்ணைத் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த பண்ணையில் இன்று(06-02-2025) அதிகாலையில் 3 - 4 மணியளவில் மின் கசிவின் காரணமாக திடீரென தீபற்றி மல மலவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் மெபூப் தலைமையில், பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் தீயை அணைப்பதற்குள் உன்னை கொட்டகை மற்றும் கோழிகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரூ.8 லட்சம் மதிப்பிலான பண்ணை கொட்டகை மற்றும் 3,500 கோழிகள், பண்ணை விலையில் ரூபாய் சுமார் 7டன் என்றாலும், ரூ.7 லட்சம், ஆகமொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பண்ணை கொட்டகை மற்றும் இதர பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது.