Skip to main content

“மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது” - ஆளுநர் பேச்சு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

nn

 

'கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது' என தமிழக ஆளுநர் ரவி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஏற்கனவே தமிழக ஆளுநரின் திருக்குறள் மொழிபெயர்ப்பு, தமிழகம் உள்ளிட்ட கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டு சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் உரையின் போது வெளியேறும் அளவிற்கு பரபரப்பாகி இருந்தது.

 

இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர், ''சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாடும், ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாகக் காட்டுவதும் மேற்கத்திய அடிமை மனநிலைக்கான உதாரணம். கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது” எனப் பேசிய ஆளுநர், இந்தியாவின் அண்மைக்கால வளர்ச்சியை இந்து வளர்ச்சி விகிதம் எனக் குறிப்பிட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்