Skip to main content

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஆன்லைன் புக்கிங் வசதி அறிமுகம்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Introduction of online booking facility at Pichavaram Tourism Centre

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகச் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.  இங்கு 5 ஆயிரம் ஏக்கர் சதுரபரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளது.  இந்த காடுகளில் இடையே உள்ள வாய்க்காலில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்து உள்ளது.  இங்குத்  தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அலையாத்தி காடுகளில் உள்ள வாய்க்காலில் படகு சவாரி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குத் தமிழக மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதில் படகு சவாரி செய்ய பல பேருக்கு வாய்ப்பு கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள்.  இதனைச் சமாளிக்கும் விதமாக தற்போது பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஆன்லைன் மூலமாக படகு சவாரி செய்ய புக்கிங் செய்யும் வசதி சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய விரும்புபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையத்தில் ஆன்லைனில் புக் செய்து சரியான நேரத்தில் படகு சவாரி செய்யலாம்.  இதனால் தொலை தூரங்களில் இருந்து வந்து படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பி செல்வோருக்கு இது பயனுள்ளதாக  அமைந்துள்ளது.  இதனைச் சுற்றுலா பயணிகள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

சார்ந்த செய்திகள்