Published on 13/11/2020 | Edited on 13/11/2020
![ias officers transfer tamilnadu government order](http://image.nakkheeran.in/cdn/farfuture/vhofE4JR7ASZUHX5D94-foDRIVQ426Is5wqBGknR4Uc/1605265299/sites/default/files/inline-images/tn%20govt_9.jpg)
தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருவூலத்துறை ஆணையராக இருந்த சமயமூர்த்தி போக்குவரத்துத்துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு மனிதவள கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கருவூலத்துறை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துச் செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளிநாட்டு மனிதவள கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.