நீலகிரி மாவட்டம், சேரம்பாடி சுங்கம் மெயின் சாலையில், 300- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய போராட்டத்தின் ஒரு பகுதி மக்கள், "யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும், 3 பேரைக் கொன்றுவிட்டன. மக்கள் உயிருக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வனத்துறையினர் யாரும் இங்கே வந்து பேசவில்லை. கேரளாவில் நிறைய அடர்ந்த காட்டுப் பகுதிகள் இருக்கின்றன. அதற்குள் யானைகளை அனுப்ப வேண்டியதுதானே என்றால் வனத்துறையிடம் போதுமான வாகனங்கள் இல்லை எனச் சொல்கிறார்கள். சரி, இதற்கு என்னதான் வழி என்று கேட்டால், பிணங்களை அடக்கம் செய்யுங்கள், அடுத்த முறை இப்படி நேராத வண்ணம் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள். யானைகளை விரட்ட முடியாத வனத்துறையினராக இவர்கள் இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் ஏதாவது செய்து யானைகளை விரட்டுவோம் என உறுதியளித்து இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், 5 -ஆவது நாள், மீண்டும் இங்கே போராட்டம் நடக்கும்" என்கிறார்கள் பந்தலூர் சேரம்பாடி மக்கள்.