!["He is the owner of a life of guiding sacrifice" - Stalin's greetings!](http://image.nakkheeran.in/cdn/farfuture/O7o0X5Qgbiz87uxEA5T1F6phDuz9RWE5X2e65TXf-9o/1626320615/sites/default/files/inline-images/SANGARAIYA.jpg)
பொதுவுடைமை சிந்தனையாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யாவின் 100வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகைபுரிந்த சீதாராம் யெச்சூரி, டி.கே. ரங்கராஜன், ஜி. ராமகிருஷ்ணன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் சங்கரய்யாவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக சார்பில் வன்னியரசு ஆகியோரும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
!["He is the owner of a life of guiding sacrifice" - Stalin's greetings!](http://image.nakkheeran.in/cdn/farfuture/BHp9bo8nPX2e-xyCu3kPh7dwZj1kd0DBokod3ZRszZM/1626320791/sites/default/files/inline-images/AAA_7.jpg)
அதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சங்கரய்யாவின் 100வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், ''தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யாவை வாழ்த்துவோம். பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் சங்கரய்யா. பொதுவுடைமை இயக்க கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு சொத்தாக இருக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரில் சென்று சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.