Skip to main content

'பொதுமக்கள் கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்க...''-கிராம சபையில் அமைச்சர்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

'Officials should answer the public question ...' '- Minister Meyyanathan in the Grama saba

 

கரோனா கட்டுப்பாடுகளால் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகார பலமிக்க கிராம சபைக் கூட்டங்கள் இன்று காந்தி ஜெயந்தியில் நடந்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலமரத்தடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, ''கிராம சபை என்பது பலமான அதிகாரம் மிக்க அமைப்பு. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் பலமானதாக இருக்கும்'' என்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராகக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்கள்.

 

செங்கோடன் என்பவர் பேசுகையில்,''கொத்தமங்கலம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி. இங்கு 25 நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. ஆனால் ஒரே ஒரு இயக்குநர் தான் உள்ளார். ஒருவரே 25 தொட்டிகளை இயக்க முடியுமா?  பல  இடங்களில் மாதம் ரூ.250க்கு பலரை நியமித்தார்கள். அவர்களுக்கும் பல மாதமாகச் சம்பளம் இல்லை. மேலும் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்கா, விளையாட்டு அரங்கம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது'' என்றார்.

 

இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்கள் என்று அமைச்சர் சொல்ல, திட்ட அலுவலர், ''விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என்றார். ''விரைவில் என்றால் எத்தனை நாளில் என்று சொல்லுங்கள்'' என்று அமைச்சர் கேட்க, ''ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும்'' என்றார்.

 

தொடர்ந்து ஒரு பெண் பேசுகையில், ''நூறு நாள் வேலையை 150 நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எங்களுக்கு ஆண்டுக்கு 12 நாள் தான் வேலை கிடைக்கிறது''என்றார். இந்த கோரிக்கையையும் சரி செய்யப்படும் என்றார் அதிகாரி.

 

விஜயகுமார் என்பவர் பேசுகையில், ''நெகிழி பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களிடம் மட்டும் சொல்வதைவிட நெகிழி தயாரிப்பு நிறுவனங்களை மூடினாலே நெகிழி பயன்பாட்டுக்கு வராதே. நூறு நாள் வேலையில் தண்ணீர் செல்லும் வரத்து வரிகளில் தடையான ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சீரமைப்பதில்லை. பிறகு எப்படி தண்ணீர் போகும்?' 'எனக் கேட்டார்.

 

அதற்குப்  பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், ''நெகிழியால் முற்றிலும் பாதிக்கப்படுகிறோம். அதனால் தான் 3,000 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து விற்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும் அதனைப்  புறக்கணிக்க வேண்டும். அதேபோல வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அதிகாரிகள் அகற்ற வேண்டும்'' என்றார்.

 

பிரபாகரன் என்பவர் பேசுகையில், ''அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பெயரைப் பயன்படுத்தி பணம் எடுத்து மோசடி நடந்திருக்கிறது?''என்றார்.

 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், ''இது பற்றி உடனே சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடுகிறேன். ஒரு வாரத்தில் அறிக்கை வேண்டும்'' என்றார்.

 

அதேபோல மின்வாரியம், சாலை, தெருவிளக்கு, குடிநீர், புதிய வீடுகள் பற்றி கேள்விகளுக்கும் அதிகாரிகளையே பதில் கூற வைத்ததோடு. அதிகபட்சம் 2 முதல் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.